#Breaking: ஓடும் பேருந்தில் பகீர்.. பதறவைக்கும் காட்சிகள்.. சம்பவ இடத்திலேயே சோகம்..!



Namakkal Tragedy Young Man Falls from Moving Bus, Dies After Getting Caught in Wheels

மதுபோதையில் ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Namakkal Kumarapalayam Bus Accident News: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து, ராசிபுரம் நோக்கி தனியார் பேருந்து சென்றுகொண்டு இருந்தது. இந்த பேருந்து நேற்று (பிப்.09) மாலை சுமார் 05:00 மணியளவில் பள்ளக்காப்பாளையம் பகுதியில் சென்றது. அப்போது, பேருந்தின் இருக்கையில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், திடீரென படிக்கு அருகில் வந்து தவறி விழுந்தார். இதில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தவர், அங்கிருந்தவர்களால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். 

namakkal

படிக்கட்டு பயணத்தால் சோகம்:

மருத்துவமனையில் இளைஞரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், போதையில் இருந்த இளைஞர் பேருந்தின் படிக்கட்டு பகுதிக்கு வந்தபோது தவறி விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என தெரிவித்தனர். இதுகுறித்த பதறவைக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. இளைஞர் யார் என்பது தெரியவில்லை என்பதால், அவரின் அடையாளத்தை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

அதிர்ச்சியூட்டும் காட்சிகள்:

வீடியோ நன்றி: தந்தி தொலைக்காட்சி