பல பெண்களுடன் தொடர்பு.. இளம்பெண்ணுடன் 3-வது திருமணம்.. கருப்பசாமி பூசாரி மீது பரபரப்பு புகார்!
சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த சாந்தகுமார் என்பவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவருடைய மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை ஆவடி அருகே உள்ள பொத்தூர் பகுதியில் உள்ள கருப்பசாமி கோவிலில் 45 வயதான சாந்தகுமார் என்பவர் கோவில் பூசாரிக உள்ளார். இவருக்கு கௌசல்யா என்ற பெண்ணுடன் கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணமாகி, தற்போது 2 பிள்ளைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் சாந்தகுமார் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குறி சொல்லி வந்துள்ளார். இதில், பல பெண்களை தனது பூஜை மற்றும் வேண்டுதல்களை செய்ய வைத்து தனது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.
இதையும் படிங்க: "பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்..." பெற்ற பிள்ளைக்கு பாலியல் தொல்லை.!! தந்தை மீது போக்சோ வழக்கு.!!

இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருடாவதாக 2வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ள நிலையில், முதல் மனைவியான கௌசல்யா ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவர் மீது புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது சென்னை கொளத்தூரை சேர்ந்த 24 வயதான இளம் பெண்ணை மயக்கி மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து தற்போது சாந்தகுமாரின் மனைவி தனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இளம்பெண்ணுக்கு சித்தப்பா மேல் மோகம்... கணவனுக்கு ஸ்கெட்ச்.. சினிமாவை மிஞ்சிய கொடூரம்.!