இளம்பெண்ணுக்கு சித்தப்பா மேல் மோகம்... கணவனுக்கு ஸ்கெட்ச்.. சினிமாவை மிஞ்சிய கொடூரம்.!
மதுரையை சேர்ந்த தேவா (27 வயது) என்ற நபர் கூலி தொழில் செய்து தன் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இவர், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தாமரைக் குளம் பகுதியில் தன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு இந்திராணி என்ற 26 வயது மனைவியும் 3 வயது ஆண் குழந்தையும் இருக்கின்றது.
கடந்த 26 ஆம் தேதி அவரை காணவில்லை என்று போலீசில் தாயார் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டு வந்த நிலையில் மனைவி இந்திராணி கணவரை கொலை செய்துவிட்டதாக போலீசில் சரணடைந்தார்.
இதனை தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் இந்திராணிக்கு தன்னுடைய சித்தப்பாவுடன் கள்ள தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இருவரும் தேவா இல்லாத நேரத்தில் வீட்டிலேயே உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது தேவாவுக்கு தெரியவந்து கண்டித்துள்ளார்.
இதையும் படிங்க: இச்சைக்காக 3 வயது மகள் படுகொலை.!! தாய், கள்ளக்காதலன் கைது.!!

தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால் அவரை கொலை செய்ய முடிவு செய்து கடந்த டிசம்பர் 28 இல் அவரை கத்தியால் குத்தி இருவரும் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தனர். பின்னர், ஒரு ஆம்புலன்ஸை கொண்டு அவரது உடலை கரூர் ரயில் தண்டவாளத்தில் கொண்டு சென்று போட்டுள்ளனர். பின் இந்திராணி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
போலீசார் தடயங்களை கைப்பற்றி விசாரித்துக் கொண்டிருந்த நிலையில் தான் மாட்டிக் கொள்வோம் என்ற சந்தேகம் இந்திராணிக்கு ஏற்பட தானாகவே வந்து போலீசில் சரணடைந்துள்ளார். இதனை தொடர்ந்து, போலீசார் தலைமறைவாக இருக்கும் இந்திராணியின் சித்தப்பா வினோத்குமார் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.