BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
"பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்..." பெற்ற பிள்ளைக்கு பாலியல் தொல்லை.!! தந்தை மீது போக்சோ வழக்கு.!!
தென்காசி மாவட்டத்தில் 1 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தந்தை கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நபர் மீது போக்சோ வழக்கு தொடர்ந்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள சின்னகாளாம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பூவைலிங்கம். இவர் தனது கிராமத்தின் அருகிலுள்ள ஆலையில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரும் விஜயலட்சுமி என்ற பெண்ணும் காதலித்து, பெற்றோர் எதிர்ப்பையும் மீறி 2023 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பூவைலிங்கம் தவறான பழக்கங்களுக்கு அடிமையாகி வந்திருக்கிறார். மேலும் பல பெண்களுடனும் தொடர்பு வைத்திருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் 1 வயதேயான தனது பெண் குழந்தைக்கும் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார் பூவைலிங்கம். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் இது தொடர்பாக தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையும் படிங்க: அட பாவமே... பெத்த மகளுக்கே பாலியல் தொல்லை.!! தந்தை மீது பாய்ந்த போக்சோ சட்டம்.!!
அவரது புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் இந்த கொடூர சம்பவம் தொடர்பான விசாரணையில் இறங்கினார். இதனைத் தொடர்ந்து பூவைலிங்கம் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்துள்ள காவல் துறை அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தது.
இதையும் படிங்க: சிறுமி கர்ப்பம்... மது போதையில் தந்தை செய்த கொடூரம்.!!