அதிர்ச்சி.. இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 சவரன் நகை பறிப்பு.. முகமூடி கொள்ளையர்கள் துணிகரம்.!

அதிர்ச்சி.. இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 சவரன் நகை பறிப்பு.. முகமூடி கொள்ளையர்கள் துணிகரம்.!


Shocking.. 5 pieces of jewelry stolen from a woman on a two-wheeler.. Masked robbers are daring.!

திண்டிவனம் கொள்ளார் கிராமத்தில் ராமலிங்கம் - சரசு தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் திண்டிவனம் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் மெஸ் ஒன்று நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சரசு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கொள்ளார் பேருந்து நிலையம் அருகில் அவர் சென்று கொண்டிருந்தபோது எதிரில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் சரசு கழுத்தில் இருந்த 5 சவரன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

robbery

இதனால் சரசு நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அந்த மர்ம நபர்களை பிடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்களை பிடிக்க முடியவில்லை என்றும் வழிப்பறி செய்த இருவரும் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அடையாளம் தெரியவில்லை என்றும் சொல்லப்படுகிறது. 

இதனை தொடர்ந்து சரசு காவல் நிலையம் சென்று இந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.