பிரபல நிறுவனத்தின் துணிக்கடையில் உடைமாற்றும் அறையில் செல்போன்... காவல்துறை தீவிர விசாரணை.!.

பிரபல நிறுவனத்தின் துணிக்கடையில் உடைமாற்றும் அறையில் செல்போன்... காவல்துறை தீவிர விசாரணை.!.


shock-in-kallakurichi-cell-phone-in-the-changing-room-o

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரபலமான துணிக்கடை ஒன்றில் பெண்கள் உடை மாற்றும் அறையில் செல்போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால்  அப்பகுதியில் அதிர்ச்சியும் பதற்றமும் நிலை வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் திருக்கோவிலூர் நகரத்தின் மையப்பகுதியில்  பிரபலமான ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் துணிக்கடை இயங்கி வருகிறது. இந்தக் கடைக்கு துணி வாங்குவதற்காக இரண்டு பெண்கள் நேற்று மாலை வந்தனர்.

tamilnadu

அவர்கள் எடுத்த துணிகளின் அளவு சரியாக இருக்கிறதா என்பதை பார்ப்பதற்காக உடைமாற்றும் அறைக்கு சென்றுள்ளனர். அப்போது உடைமாற்றும் அறையில் இருந்த ஏசி பாயிண்டில் செல்போன் ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டு பெண்களும் அலறிக்கொண்டே வெளியே வந்தனர். இதனை கவனித்துக் கொண்டிருந்த அருகில் இருந்த ஒரு பெண் உடனடியாக உடைமாற்றும் அறைக்கு சென்று அந்த செல்போன்களை எடுத்துக் கொண்டே வெளியே செல்ல முற்பட்டுள்ளார். அவரை  துணிக்கடையின் ஊழியர்கள் மடக்கிப்பிடித்து இச்சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை புரிந்த திருக்கோவிலூர்  காவல்துறை ஆய்வாளர் பிரபு  சம்பவம் நடந்த இடங்களை பார்வையிட்டார்  மேலும் செல்போனை எடுத்துக் கொண்டு வெளியேறும் என்ற பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அவரது செல்போனை பரிசோதித்துப் பார்த்ததில் அதில் மெமரி கார்டு இல்லை. அந்தப் பெண் மெமரி கார்டை எடுத்து ஒளித்து வைத்திருக்கிறாரா என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த செல்போனை வைத்து படம் பிடிக்க முயன்றது கடையில் உள்ள ஊழியர்களால் அல்லது வெளியில் இருந்து யாரேனும் இந்த செயலில் ஈடுபட்டார்கள் என்பது தொடர்பாகவும் காவல்துறை விசாரணை செய்து வருகிறது.