தொடர் ஆசிரியர் போராட்டம்!. முதல்வருடன் ஆலோசனை நடத்தி அமைச்சர் செங்கோட்டையன் விடுத்த அதிரடி அறிவிப்பு!

தொடர் ஆசிரியர் போராட்டம்!. முதல்வருடன் ஆலோசனை நடத்தி அமைச்சர் செங்கோட்டையன் விடுத்த அதிரடி அறிவிப்பு!



senkottaiyan talk about jacto geo strike

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது தொடர்பான பல கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பின் அரசு பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் 25ஆம் தேதிக்குள் ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள்.

jacto geo

ஆனால் இந்த உத்தரவை மீறி தொடர் போராட்டத்தில் ஈடு படப்போவதாக தெரிகிறது. இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், பொதுத்தோ்வுகள் நெருங்கி வருவதால் ஆசிாியா்களின் போராட்டமானது மாணவா்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. எனவே அவா்களுக்கு பதிலாக ரூ.7,500 தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக ஆசிாியா்களை நியமிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் தமிழக முதல்வர் இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தார்.

jacto geo

அவர்கள் சந்திப்பு ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும், அவர்களது  கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கோரிக்கைகள் கலந்தாலோசிக்கப்பட்டு நல்ல தகவல் வெளிவரும் , அரசின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறியுள்ளார்.