#Breaking News: கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! முதலமைச்சர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு!

#Breaking News: கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! முதலமைச்சர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு!


semester-exam-cancelled

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக பள்ளி கல்லூரிகள் பல மாதங்களாக மூடப்பட்டன. இதனையடுத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கவில்லை. மாணவர்கள் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

semaster

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், கலை , அறிவியல் இளநிலை படிப்பில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வும், முதுநிலை படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வும் ரத்து செய்யப்படுகிறது.

தொழிற்கல்வி மாணவர்களுக்கான பட்டய தேர்வும் ரத்து செய்யப்படுகிறது
பொறியியல் படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வும், எம்.இ மாணவர்களுக்கான முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வும் ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் அடுத்த கல்வியாண்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். படிப்பை முடிக்க இறுதி தேர்வை எழுதுபவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படவில்லை.