அரசியல் தமிழகம்

கமல்ஹாசன் ஒரு கத்துக்குட்டி: அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு பேச்சு!.

Summary:

sellur raju talk about kamalhassan


கஜா புயல் பாதிப்பால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பலர் வீடுகளை இழந்து, விவசாய பயிர்கள், மரங்கள், ஆடு மாடுகள் ஆகியவற்றை இழந்து தவித்துவருகின்றனர்.

இந்த நிலையில், கஜா புயலால் பாதித்த  மாவட்டங்களுக்கு ரூ.40 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று வழங்கினார்.

மதுரையில் இருந்து புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரூ.40 லட்சம் மதிப்புள்ள அரிசி, பிஸ்கட்,   வேஷ்டி, சட்டை, சேலை உணவுப் பொருள்களை ஆகியவற்றை லாரிகள் மூலமாக இன்று அனுப்பி வைக்கப்பட்டது. 

sellur raju க்கான பட முடிவு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு, கஜா புயலால் பாதக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டு , நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். 

எதிர்க்கட்சிகள் குறைசொல்வது தங்களை சுய விளம்பரப்படுத்திக் கொள்ளத் தான் என குறிப்பிட்ட செல்லூர் ராஜு, கமல் ஹாசன் தனது ஒவ்வொரு பேட்டியின் போதும், அரசை குறை சொல்வதே வழக்கமானதாக கொண்டுள்ளார் எனவும் அரசியலில் கமல் ஹாசன் ஒரு கத்துக்குட்டி எனவும் கூறியுள்ளார்.


Advertisement