கொரோனா என்னை லைட்டா டச் பண்ணிட்டு போச்சு.! வடிவேலு பாணியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ! - TamilSpark
TamilSpark Logo
அரசியல் தமிழகம் Covid-19

கொரோனா என்னை லைட்டா டச் பண்ணிட்டு போச்சு.! வடிவேலு பாணியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ!

சமீபத்தில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செல்லூர் ராஜு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றார்.  இந்தநிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கொரோனோ நோய் தொற்றிலிருந்து குணமடைந்து மதுரை திரும்பினார். 

கொரோனாவிலிருந்து குணமடைந்து சொந்த ஊருக்கு திரும்பிய அமைச்சருக்கு கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து வரவேற்பு அளித்தனர். 

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர், வடிவேல் சொன்னது போல கொரோனா என்னை லைட்டா டச் பண்ணிவிட்டுச் சென்றது. எனது மனைவிக்கு தொற்று ஏற்பட்டபோது அவரை பார்க்க சென்றபோது எனக்கும் தொற்று ஏற்பட்டது. உரிய சிகிச்சை பெற்று இருவரும் குணமடைந்துவிட்டோம். நாளை முதல் பொதுப்பணியில் ஈடுபடவுள்ளேன் என்று கூறினார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo