விஸ்கி, பிராந்தி, பீர் என்ன புனித நீரா.? இது தான் திராவிட மாடலா.? தமிழக அரசை வெளுத்து வாங்கிய சீமான்.!

விஸ்கி, பிராந்தி, பீர் என்ன புனித நீரா.? இது தான் திராவிட மாடலா.? தமிழக அரசை வெளுத்து வாங்கிய சீமான்.!



seeman talk about tasmac

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக காவல்துறை ஆப்பரேஷன் 2.0  என்ற வேட்டையை நடத்தியது. இந்த வேட்டையில் போதை பொருள் வியாபாரிகள் பிடிபட்டனர். ஒரே மாதத்தில் இந்த வேட்டையில் 2,423 வியாபாரிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களிடம் இருந்து சுமார் 3600 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன என்றும் அவர்களுடைய பல வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில்,  குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இக்குற்றங்களில் ஈடுபடுவோர் பெயரில் இருக்கக்கூடிய அசையும் மற்றும் அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் சட்டசபையில் தமிழக முதல்வர் அறிவித்த செய்தி படித்தேன். பாராட்டுக்கள்!


 ஆனால் குட்கா, கஞ்சா போன்ற பொருட்கள் போதை பொருட்களென்றால், டாஸ்மாக்கில் தமிழக அரசே அமோகமாக விற்கும் விஸ்கி, பிராந்தி, பீர் போன்றவைகள் என்ன புனித நீரா? போதை பொருட்களில் சிலவற்றுக்கு தண்டனையும், சிலவற்றை அரசே விற்பதும் தான் திராவிட மாடலா? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.