அரசியல் தமிழகம்

விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி சீமான் சொன்ன முக்கிய தகவல்!

Summary:

seeman talk about prabakaran

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் 65ஆவது பிறந்தநாள் விழா நாம் தமிழ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவில் பேசிய சீமான், தனக்கும், பிரபாகரனுக்கும் இடையேயான பழைய நினைவுகளை கூறியுள்ளார்.

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் 65ஆவது பிறந்தநாள் சென்னை போரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நாம் தமிழ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு கேக் வெட்டினார். மேலும், இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தனக்கும், பிரபாகரனுக்கும் இடையேயான பழைய நினைவுகளை கூறியுள்ளார்.

விழாவில் தொடர்ந்து பேசிய சீமான், பிரபாகரனின் எண்ணம் ஈடேறும், தமிழீழம் அமையும் என்று கூறினார். போர்ச் சூழலில் நான் அங்கு சென்றிருந்தபோது நான் என்னவெல்லாம் சாப்பிடுகிறேன் என்பதை எனக்கு பின்னால் இருந்த ஒருவர் குறித்து கொண்டே இருந்தார். இதுகுறித்து நான் அவரிடம் கேட்ட போது, தலைவர் பிரபாகரன் தெரிந்துகொள்வதற்காக எடுக்கச் சொன்னார் என கூறினார்.

தொடர்ந்து பேசிய சீமான் பிரபாகரன் தனக்கு போட்டு அம்மன் வீட்டில் விருந்து கொடுத்ததைப் பற்றி பகிர்ந்து கொண்டார். மேலும் பிரபாகரன், காட்டில் உள்ள ஒரு வீட்டிற்குள் அழைத்துச்சென்று விதவிதமான உணவுகளை விருந்தளித்து தனக்கு ருசிக்க தந்ததாகவும் சீமான் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
 


Advertisement