தமிழகம்

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சீமான் வைத்த கோரிக்கை.! ஓகே சொன்ன மு.க.ஸ்டாலின்.! அவரே வெளியிட்ட தகவல்.!

Summary:

கொரோனா வைரசுக்கு எதிராக தமிழக அரசு எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்

கொரோனா வைரசுக்கு எதிராக தமிழக அரசு எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் பலரும் நிதி உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குநர் பாரதிராஜா ஆகிய இருவரும் நிதி உதவி வழங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக சீமான் வெளியிட ட்விட்டர் பதிவில், கொரோனா தீவிர தொற்றுக்குள்ளானவர்களுக்கும் தமிழ் சித்த மருத்துவ முறையில் சிகிச்சையளிக்க அனுமதி, பள்ளி-கல்லூரிகளில் இணையவழி வகுப்புகளுக்கான கல்விக்கட்டணத்தை அரசே நிர்ணயம்செய்தல், 12ஆம் வகுப்புக்கான தேர்வுகளை ஒத்திவைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நாம்தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்தினேன்.


முதல்வருடனான இச்சந்திப்பின்போது உடன் வந்திருந்த 'இயக்குநர் இமயம்' அப்பா பாரதிராஜா அவர்களும் தனது சார்பில் ரூபாய் 5 இலட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். முதல்வரிடம் எழுவர் விடுதலையை வலியுறுத்தியபோது விரைவில் நிறைவேறும் என்று உறுதியளித்தார்.

தலைமைச்செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, கொரோனா துயர்துடைப்பு பணிகளுக்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக, 5 இலட்சம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினேன். என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement