தமிழகம்

கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை; மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!!

Summary:

தமிழகத்தில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழை!. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!.

சென்னை மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை தூத்துக்குடி  மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.


Advertisement