தமிழகம்

நண்பனுக்காக காத்திருந்த பள்ளி ஆசிரியை! இடையில் வந்த மர்ம நபர்கள் செய்த கொடூரச்செயல்!

Summary:

School teacher kidnapped

 

திருப்பூர் அருகே அரசு பள்ளி ஆசிரியையை மர்ம நபர்கள் கடத்தி பணம் பறித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து தப்பித்து அந்த ஆசிரியை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த சசிகலா, இருகூர் அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இவரது பள்ளிப்பருவ நண்பரான பல்லடத்தை சேர்ந்த ஆசாத் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பல்லடத்தில் நடைபெற்ற விழாவுக்கு சசிகலா சென்றபோது அவரை சந்தித்து பேசியுள்ளார்.

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டபோது, சசிகலா தனக்கு திருமணம் முடிந்து விவாகரத்து ஆனதை ஆசாத்திடம் கூறியுள்ளார். இதனையடுத்து சசிகலாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசாத் கூறியுள்ளார். ஆனால் ஆசாத்திற்கு ஏற்கனவே வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆகி உள்ளது.

இந்தநிலையில் இருவரும் போனில் பேசி வந்த்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சசிகலாவால் கடந்த சில நாட்களாக ஆசாத்தை தொடர்பு கொள்ள இயலாமல் இருந்துள்ளது. அந்த சமயத்தில் சசிகலாவை தொடர்பு கொண்ட நபரொருவர் தனது பெயர் மதன் என்றும், நான்  ஆசாத்துடைய நண்பர் என்றும்., ஆசாத்துடன் திருமணம் செய்து வைக்க ரூ.1 லட்சம் பணம் கேட்டுள்ளார்.

 

இதனையடுத்து திருப்பூரில் அவிநாசி சாலையில் சசிகலா நின்றுகொண்டிருந்த போது, காரில் வந்த மதன் சசிகலாவை காரில் ஏற்றி சென்றுள்ளார். அப்போது காருக்குள் மூன்று நபர்கள் இருந்துள்ளனர். இதனையடுத்து ஆசாத் குறித்து சசிகலா கேட்டபோது சசிகலாவை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

 

இதனையடுத்து சசிகலாவின் ஏ.டி.எம் கார்டு மூலமாக ரூ.90 ஆயிரத்தை எடுத்துகொண்டு, சசிகலாவை கொலை செய்ய முயற்சித்துள்ளனர். அப்போது அவர்களிடம் இருந்து தப்பித்த சசிகலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அண்ணன் தம்பி இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Advertisement