சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
வகுப்பறைக்குள் சென்ற சாந்தி டீச்சர்! மறுநாள் கதவை திறந்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி!
திருவள்ளூர் மாவட்டம் காரம்பாக்கம் எல்லையம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பள்ளி ஆசிரியை ஹரி சாந்தி. 32 வயதாகும் சாந்தி சுமார் 5 வருடங்களுக்கு முன்பு அரும்பாக்கத்தில் உள்ள டிஜி வைஷ்ணவா பெண்கள் கல்லூரியில் தெலுங்கு பிரிவில் உதவி விரிவுரையாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இதற்கிடையே ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதிய சாந்தி அதில் வெற்றிபெற்று அரசு ஆசிரியையாக பெரம்பூரில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் பணிபுரிந்துவந்துள்ளார். இந்நிலையில் தான் கல்லூரியில் வேலைபார்த்த காலங்களில் தன்னுடன் பணிபுரிந்த நண்பர்களை பார்ப்பதற்காக சாந்தி அவ்வப்போது கல்லூரிக்கு வருவது வழக்கம்.

அந்த வகையில் சம்பவத்தன்று சாந்தி கல்லூரிக்கு வந்துள்ளார். மேலும், தான் பாடம் சொல்லிக்கொடுத்த தெலுங்கு பிரிவு வகுப்பறைக்கு சென்றுள்ளார். அதன்பிறகு அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் தெலுங்கு பிரிவு ஆசிரியர் ஒருவர் இன்று காலை வகுப்பறையை திறந்து பார்த்தபோது சாந்தி தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.
அவரது சடலத்தின் அருகில் அவர் கொண்டுவந்த கைப்பை, செல்போன் ஆகியவை இருந்துள்ளது. அங்கிருந்த CCTV காட்சிகளை சோதனை செய்ததில் சாந்தி வகுப்பறைக்குள் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
சாந்தி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலையா? என்ன காரணம் என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.