நாகப்பட்டினம் 2 தாலுகாவில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

நாகப்பட்டினம் 2 தாலுகாவில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் உத்தரவு!


school leave in naagai

 நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் என்ற கிராமத்தில் சிக்கல் நவநீதேசுவரர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது சிக்கல் சிங்காரவேலர் ஆலயம். பல்வேறு சிறப்புகள் பெற்ற சிங்காரவேலர் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான கந்தசஷ்டி விழா இன்று நடைபெறவுள்ளது.

இந்த விழாவை முன்னிட்டு நாகை, திருமருகல் தாலுகாவிற்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் நடைபெறும் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு இன்று மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

school  leave
This photo of Sikkal Singaravelar Temple is courtesy of TripAdvisor

சிக்கல் சிங்காரவேலர் சன்னதி மிகப்பழமை வாய்ந்த இந்துக்கோவில் ஆகும். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத முருகனின் ஏழாவது படைவீடாகும். சிவனும், விஷ்ணுவும் ஒரே இடத்தில் அமைந்துள்ள அரிய தொன்மையான இந்துக்கோவிலாகும். சிக்கலில் பார்வதியிடம் முருகன் வேல் பெற்றுத் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்தார் என்பது இந்த கோவிலின் தனிச்சிறப்பாகும்.