புதுக்கோட்டையில் கட்டி முடிக்கும் முன்பே இடிந்து விழுந்த அரசு பள்ளி கட்டிடம்; தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டி கிராம மக்கள் கோரிக்கை!!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மாங்கோட்டை கிராமத்தில் உள்ள கீழ்ப்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி புதிய பள்ளி கட்டிடம் கட்டிகொண்டிருக்கும் போதே திடீரென இடிந்து விழுந்தது.
பொதுவாக அரசு பள்ளி கட்டிடங்கள் ஒப்பந்தக்காரர்கள் மூலமாக கட்டப்படுவது தான் வழக்கம். சில ஒப்பந்தக்காரர்கள் தங்களின் லாப நோக்கத்திற்காக குறைவான விலையில் விற்கப்படும் தரமற்ற பொருட்களால் பள்ளி கட்டிடங்களை காட்டும் அவலநிலை தமிழகத்தில் நிகழ்ந்து வருகின்றன.
தாங்கள் காட்டும் கட்டிடங்கள் பள்ளி மாணவ மாணவிகள் பாதுகாப்பாக அமர்ந்து படிக்கச் உதவ வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு எண்ணுவதில்லை. இத்தகைய தரமற்ற காட்டிடங்கள் இடிந்து விழுந்தால் பள்ளி மாணவ மாணவிகளின் நிலை என்னவாகும்.
இதை போன்ற ஒரு அவலநிலை தான் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மாங்கோட்டை கிராமத்தில் உள்ள கீழ்ப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்துள்ளது. அந்த பள்ளியில் சமீபத்தில் ஒரு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கட்டிடத்தின் அடித்தளத்திற்கு தேவையான சுவர் மட்டும் சில நாட்களுக்கு முன்பு எழுப்பப்பட்டுள்ளது.
அதன் பின்பு பெய்த மழையால் அந்த சுவர் தானாகவே இடிந்து விழுந்துள்ளது. இதனை கண்ட அந்த ஊர் மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். தரமற்ற பொருட்களால் காட்டியதால் தான் இந்த சுவர் இடிந்துவிட்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
இப்படி தரமற்ற கட்டிடத்தில் அமர்ந்து படிக்கச் தங்களது குழந்தைகளை எப்படி நம்பி அனுப்ப முடியும் என்று வினா எழுப்புகின்றனர்.
ஏற்கனவே அரசு பள்ளிகளில் தரமற்ற கல்வி வழங்கப்படுகிறது என்ற குறையினால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. மேலும் இதைப்போன்ற தரமற்ற கட்டிடங்களால் பயத்தில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் நிலைதான் ஏற்படும்.
எனவே இதைப்போன்ற தரமற்ற முறையில் கட்டப்படும் பள்ளி கட்டிடங்களை தமிழக அரசு முறையாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாங்கோட்டை கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் தங்கள் ஊரில் கட்டப்படும் பள்ளி கட்டிடத்தை முதலில் இருந்து தரமான பொருட்களை வைத்து கட்டித்தர வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தி ஏழை மக்களுக்கு தரமான கட்டிடத்தில் தரமான கல்வி தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம், அரசு பள்ளிகளை காப்போம்.