அரசியல் தமிழகம்

சிறைக்கு சென்று 3 ஆண்டுகள் ஆகியும் ரூ.10 கோடி அபராதம் காட்டாத சசிகலா! தண்டனை நீட்டிக்கப்படுமா?

Summary:

sasikala yet not pay fine

சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்து 3 ஆண்டுகள் ஆகியும் நீதிமன்றம் விதித்த ரூ.10 கோடி அபராதத்தை சசிகலா இதுவரை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில், கடந்த 2014-ஆம் ஆண்டு தண்டனையை அறிவித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு அபராதமும் விதித்தது. இதனையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆனால், தீர்ப்பு வந்து 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அவர் அபராதம் செலுத்தவில்லை. 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை முடியும் கடைசி நேரத்தில் கூட அவர் அபராத தொகையை செலுத்தலாம். பொதுவாக கடும் அபராதம் விதிக்கப்பட்ட பெரும்பாலான குற்றவாளிகள் சிறைவாசத்தின் முடிவில் மட்டுமே பணம் செலுத்துகிறார்கள்.

சசிகலாவின் தண்டனை காலம் நீடிக்கப்பட்டு 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதியே சசிகலா வெளிவர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று ஏற்கெனவே தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


Advertisement