அரசியல் தமிழகம்

சசிகலா போட்ட பக்கா பிளான்.! பயங்கர குஷியில் அதிமுக.! பேரதிர்ச்சியில் திமுக.!

Summary:

சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா, சென்னை புறப்பட்டு வந்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா, நேற்று காலை கார் மூலம் சசிகலா சென்னை புறப்பட்டு வந்தார். வழிநெடுகிலும் அவருக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இன்று அதிகாலை 3 மணி அளவில் பூவிருந்தவல்லி நசரத்பேட்டை பகுதிக்கு வந்தடைந்தார் சசிகலா. சென்னை திரும்பிய சசிகலாவுக்கு அ.ம.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து, ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் இல்லத்திற்கு வருகை தந்த சசிகலாவுக்கு, எம்.ஜி.ஆரின் குடும்பத்தினர் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.  

எம்ஜிஆர் வாழ்ந்த வீட்டிற்குச் சென்று அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து முதன் முறையாக செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதாவின் பிள்ளைகள் என்றுமே எனக்கும் பிள்ளைகள் தான். ஒற்றுமையாக ஓரணியில் நின்று நமது பொது எதிரியை மீண்டும் தமிழக ஆட்சி கட்டிலில் அமரவிடாமல் வீழ்த்த ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது எண்ணம், என்னுடைய குறிக்கோள்.

எம்.ஜி.ஆர். கட்டிக்காத்து, ஜெயலலிதா வழியில் வெற்றிநடையுடன் வீறுநடை போட்டுக்கொண்டிருக்கும் இந்த மாபெரும் இயக்கம் சிலரின் சொந்த விருப்புவெறுப்புகளால் சிதைந்து விடக்கூடாது. அடக்குமுறைகளுக்கு நான் என்றும் அஞ்சமாட்டேன். தமிழக மக்களுக்கும், என் தொண்டர்களுக்கும் நான் அடிமை என தெரிவித்திருந்தார். ஒற்றுமையாக ஓரணியில் நின்று நமது பொது எதிரியை மீண்டும் தமிழக ஆட்சி கட்டிலில் அமரவிடாமல் வீழ்த்த ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும்  என சசிகலா பேசியது அதிமுகவினருக்கு மகிழ்ச்சியும், திமுகவினருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement