
வரும் டிசம்பர் மாதம் 3-ஆம் திகதி சசிகலா விடுதலையாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். சசிகலாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ. 10 கோடியே 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த தொகையை செலுத்தினால் அவர் 2021ஆம் ஆண்டு ஜனவரியில் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் கடந்த 18-ஆம் தேதி சசிகலாவின் அபராதமான 10 கோடியே 10 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இதையடுத்து சிறப்பு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி கே.சிவராமா சசிகலாவை விடுதலை செய்வதற்கு தடையில்லை என்பதற்கான ஆணையை சிறைத்துறைக்கு வழங்கினார்.
இந்நிலையில், வரும் டிசம்பர் மாதம் 3-ஆம் திகதி சசிகலா விடுதலையாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் விடுதலை குறித்து எழுத்துப்பூர்வமாக எந்த வித அறிவிப்பும், ஆதாரமும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த விடுதலை குறித்த ஆர்டர் வரும் திங்கட் கிழமை சசிகலாவிடம் வழங்கப்படவுள்ளதாகவும், ஜெயலலிதா நினைவு நாளுக்கு முன்பே வந்துவிட வேண்டும் என்று சசிகலா நினைப்பதாகவும் கூறப்படுகிறது. வரும் 5-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு நாள் என்பதால் சசிகலா 3-ம் தேதி வெளிவர உள்ளதாக வந்த தகவலால் சசிகலா ஆதரவாளர்கள் குஷியில் உள்ளனர்.
Advertisement
Advertisement