சசிகலா வருகையால் தடபுடலாக ஏற்பாடு.! போயஸ்கார்டனில் புதிய பங்களா.!

சசிகலா வருகையால் தடபுடலாக ஏற்பாடு.! போயஸ்கார்டனில் புதிய பங்களா.!



sasikala release

பெங்களூரு சிறையில் இருந்து வரும் 27ஆம் தேதி சசிகலா விடுதலை ஆகிறார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளநிலையில் சசிகலாவின் விடுதலையால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. 

பெங்களூர் சிறையில் இருந்து இன்னும் ஒரு வாரத்தில் அதாவது ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையாகும் சசிகலாவின் வருகை அணைத்து அரசியல் தரப்பினருக்கும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

 சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த வீடு நினைவு இல்லமாக மாற்றப்படுகிறது. ஜெயலலிதா இருந்த வரையில் அங்கேயே தங்கி இருந்த சசிகலாவால் தற்போது அங்கு சென்று குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் எதிரில் உள்ள இடத்தில் சசிகலாவுக்காக புதிய பங்களாவை கட்ட திட்டமிட்டு பணிகள் நடைபெற்றன.

sasikala

ஆனால் வருமான வரித்துறையினர் சில மாதங்களுக்கு முன்பு அங்கு நோட்டீஸ் ஒட்டினர். ஆனாலும் பணிகள் தடைபடவில்லை. வருமான வரியால் முடக்கப்பட்ட சொத்தின் சட்ட ரீதியான முடக்கம் முடிவுக்கு வரும் வரையில் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றே கூறப்படுகிறது. 

எனவே சிறையில் இருந்து வருகிற 27-ந் தேதி விடுதலையான பின்னர் சசிகலா அங்கேயே தங்கும் வகையில் வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. சசிகலாவை வரவேற்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை போன்று, அவரை தங்க வைப்பதற்கான இடங்களையும் அவரது ஆதரவாளர்கள் தடபுடலாக ஏற்பாடு செய்துள்ளனர்.