விடுதலையாக போகும் சசிகலா.! உச்சகட்ட குஷியில் அமமுகவினர்.!

விடுதலையாக போகும் சசிகலா.! உச்சகட்ட குஷியில் அமமுகவினர்.!



sasikala paid 10 crore fine

சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் என கூறப்பட்டு வந்தது. அவர் வருகின்ற சட்டசபை தேர்தலுக்கு முன்னர் எப்படியும் வெளியே வந்து விடுவார் என்ற காரணத்தால், அவரது வருகை தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மூவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ. 10 கோடியே 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 

sasikala

அந்த தொகையை செலுத்தினால் அவர் 2021ஆம் ஆண்டு ஜனவரியில் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த அபராத தொகையை நேற்று சசிகலா வழக்கறிஞர் நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளார். அபராதத் தொகையை செலுத்தாத நிலையில் சசிகலாவின் விடுதலை தள்ளிப்போய் வந்தது. தற்போது அபராதம் செலுத்தப்பட்டுவிட்டதால் விடுதலை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் அமமுகவினர். இதனையடுத்து சசிகலா விரைவில் விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.