அரசியல் தமிழகம்

சசிகலாவின் காரை பொறுமையுடன் இயக்கிய ஓட்டுனர் யார் தெரியுமா? வெளியான ஆச்சரிய தகவல்.!

Summary:

சசிகலாவின் காரை ஓட்டி வந்தவரின் தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலாவின் காரை ஓட்டி வந்தவரின் தகவல் வெளியாகியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து, சசிகலா நேற்று காலை சுமார் 7.30 மணி அளவில் பெங்களுருவில் இருந்து சென்னை புறப்பட்டார். அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் வழியாக சென்னை நோக்கி புறப்பட்டார் சசிகலா. தொண்டர்களின் உற்சாக வரவேற்பினால் அவர் இரவும் தனது பயணத்தை தொடர்ந்தார்.

23 மணி நேர கார் பயணத்துக்கு பின்னரே சசிகலா சென்னை வந்தடைந்தார். சசிகலா சென்னைக்கு வந்தவுடன் நேராக ராமாபுரம் எம்ஜிஆர் வாழ்ந்த வீட்டிற்குச் சென்று அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின்னர் வீட்டுக்கு அவர் திரும்பினார்.

சசிகலா இவ்வளவு நேரம் தொண்டர்கள் கூட்டத்துக்கு இடையே நெடுபயணம் மேற்கொண்டதற்கு பின்னால் அவர் வந்த காரின் ஓட்டுனரின் உழைப்பு பெருமளவில் உள்ளது.  சசிகலா பயணித்து வந்த காரை பிரபு என்பவர் ஓட்டி வந்தார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக 25 ஆண்டுகள் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement