தமிழகம்

தன்னைப் பற்றிய தகவல்களை 3-வது நபருக்கு வழங்கக் கூடாது.! திடீரென சசிகலா கொடுத்த மனு.!

Summary:

sasikal leter to karnataka prison

சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் என கூறப்பட்டு வந்தது. அவர் வருகின்ற சட்டசபை தேர்தலுக்கு முன்னர் எப்படியும் வெளியே வந்து விடுவார் என்ற காரணத்தால், அவரது வருகை தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீதிமன்றம் விதித்த ரூ.10 கோடி அபராதத்தை செலுத்த சசிகலா மனு அளித்திருப்பதாகவும் வரும் ஜனவரி மாதம் 27ம் தேதி வெளியாக உள்ளதாகவும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நரசிம்ம மூர்த்தி என்பவர் கேட்ட கேள்விக்கு கர்நாடக சிறைத்துறை பதில் அளித்தது.

இந்தநிலையில், என்னைப் பற்றிய தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 3-ஆம் நபருக்கு வழங்கக் கூடாது என்று சசிகலா கூறியுள்ளார். தம்மைப் பற்றிய தகவல்களை வழங்கக்கூடாது என கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கில் தொடர்பு இல்லாத 3ஆவது நபர் விளம்பர, அரசியல் நோக்கில் விவரங்களை கேட்பதால் விவரங்களை அளிக்க கூடாது என சசிகலா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 


Advertisement