போட்டியிட்ட இருவரும் சமமான வாக்குகள்! வேட்பாளர்களின் நெஞ்சை பதறவைத்த இறுதி முடிவு!
போட்டியிட்ட இருவரும் சமமான வாக்குகள்! வேட்பாளர்களின் நெஞ்சை பதறவைத்த இறுதி முடிவு!

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நேற்று காலை 8 மணி முதல் தொடங்கி இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு இருவர் தலா 409 வாக்குகள் பெற்றதால், குலுக்கல் முறையில் பெண் தேர்வு செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாத்தூர் கிழக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மலர்விழி, மஞ்சுளா ஆகிய இருவரும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின்போது, இருவரும் தலா 409 வாக்குகள் பெற்றனர். இதையடுத்து ஊராட்சி தேர்தல் சட்டத்தின்படி, குலுக்கல் முறையில் மஞ்சுளா ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.