தமிழகம்

காதலி இறந்த துக்கத்தில் காதலன் விபரீத காரியம்... கதறித்துடிக்கும் பெற்றோர்..!

Summary:

காதலி இறந்த துக்கத்தில் காதலன் விபரீத காரியம்... கதறித்துடிக்கும் பெற்றோர்..!

சேலம் மாவட்டத்தில் உள்ள கன்னங்குறிச்சி சின்ன திருப்பதி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ரவிகிரண் (வயது 29). ரவிக்கிரன் சேலத்தில் செயல்பட்டு வரும் தனியார் கால் டாக்ஸி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

இதே பகுதியை சேர்ந்த பெண்மணி மலர்விழி. மலர்விக்கும் - ரவிகிரணுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி, இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. 

இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக மலர்விழி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காதலியின் இழப்பை எண்ணி மன வருத்தத்தில் இருந்து வந்த ரவிகிரண் கடந்த 13ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். 

வாயில் நுரை தள்ளிய நிலையில், அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரவிகிரண் நேற்று இரவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

காதலி இறந்த ஒரு மாதத்தில் காதலனும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement