கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
வெளிநாட்டுக்கு செல்ல மனைவி விருப்பம்; மனதளவில் உடைந்துபோன கணவன் விபரீத முடிவு.. காதல் திருமணத்தில் சோகம்.!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர், புங்கம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் கதிர்வேல். இவரின் மகன் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 28). இவர் நடன பயிற்சியாளராக வேலை பார்த்து வருகிறார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு பகுதியில் தற்போது அவர் வசித்து வரும் நிலையில், கொளத்தூர் வால்குறிச்சி பகுதியை சேர்ந்த காவியா என்பவரை காதலித்து திருமணமும் செய்தார்.
தம்பதிகளுக்கு 2 வயதுடைய மகன் இருக்கும் நிலையில், கடந்த ஆண்டில் காவியா வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். அவர் வெளிநாடு சென்று வந்ததில் இருந்தது தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் அவ்வப்போது தான் தற்கொலை செய்வேன் என சுபாஷ் தெரிவித்து வந்த நிலையில், காவியா மீண்டும் வெளிநாட்டுக்கு செல்ல முடிவெடுத்துள்ளார். இந்த விஷயத்தில் உடன்பாடு இல்லாத சுபாஷ், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.