அரசியல் தமிழகம் Covid-19

திமுகவின் முக்கிய நபருக்கு கொரோனா தொற்று உறுதி.! மருத்துவமனையில் அனுமதி!

Summary:

RS Barathi affected by corona

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 கொரோனாவால் பொதுமக்கள் மட்டும் இல்லாமல் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர். இந்தநிலையில், களத்தில் பணியாற்றும் நபர்களுக்கும் கொரோனா உறுதியாகி வந்தது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், தி.மு.க. அமைப்பு செயலாளராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஆர்.எஸ்.பாரதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.


Advertisement