தமிழகம் இந்தியா

விவசாயிகள் எதிர்ப்பார்த்தது இன்று நடக்கவிருக்கிறது!! தமிழக முதல்வரும் பாரத பிரதமரும் தொடங்கிவைக்கின்றனர்!!

Summary:

RS 600 To farmers

 2019-20ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வரும் மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, அந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. 

அந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியூட்டும் சலுகை அறிவிக்கப்பட்டது. பிரதமர் கிஷான் திட்டம் மூலம் இரண்டு ஹெக்டேர் நிலப்பரப்பு அல்லது அதற்கு குறைவாக நிலம் உள்ள சிறு விவசாயிகளுக்கு, ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் தொகையை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

6000 money for farmers க்கான பட முடிவு 

ரூ. 75,000 கோடி பணம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிகழாண்டில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தலா ரூ. 2 ஆயிரம் வீதம் என மூன்று தவணைகளாக பிரிக்கப்பட்டு ரூ. 6 ஆயிரம் வரவு வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டது. 


இந்தத் திட்டத்தின் தொடக்க விழாவை பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் தொடங்கி வைக்கிறார்., அதேபோல் தமிழகத்திலும், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் அளிக்கும் திட்டத்தை முதல் அமைச்சர்  எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்கவுள்ளனர். 


Advertisement