உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி.! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு.!

உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி.! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு.!


 Rs 3 lakh each to the families of the deceased policemen

தமிழகத்தில் பணியின் போது விபத்து மற்றும் உடல் நலக்குறைவால் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில், தமிழகத்தில் பணியின் போது பல்வேறு சம்பங்களில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட உயிரிலிந்த காவலர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். 

இந்தநிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உடல்நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 57 காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டு, உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.