தமிழகம்

10 ரூபாய் நோட்டுகளை சிதறவிட்டு மொத்த ரூபாய் நோட்டுகளையும் ஆட்டைய போட்ட கும்பல்...

Summary:

10 ரூபாய் நோட்டுகளை சிதறவிட்டு மொத்த ரூபாய் நோட்டுகளையும் ஆட்டைய போட்ட கும்பல்...

சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள கனரா வங்கியில் மகாலிங்கம்(55) என்பவர் தனது கணக்கில் இருந்த 75 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கியிலிருந்து எடுத்து வெளியே வந்துள்ளார். அப்போது வங்கியின் வெளியே பணத்தை ஆட்டைய போட 3 பேர் கொண்ட கும்பல் திட்டம் தீட்டி வந்துள்ளனர்.

அதனையடுத்து பைக் பெட்ரோல் டேங்க் கவரில் பணத்தை வைத்து விட்டு மகாலிங்கம் புறப்பட தயாராகியுள்ளார். இவை அனைத்தையும் கவனித்து கொண்டிருந்த கொள்ளையர்களுள் ஒருவன் சில பத்து ரூபாய் நோட்டுகளை கீழே சிதற விட்டுள்ளான்.

பின் மகாலிங்கத்திடம் கீழே உங்களது பத்து ரூபாய் நோட்டுகள் இருப்பதாக கூறி மகாலிங்கத்தை திசை திருப்பியுள்ளான். மகாலிங்கம் பணத்தை எடுக்க சென்ற சமயம் பார்த்து அருகில் இருந்த மற்றோரு நபர் பைக் டேங்க் கவரில் இருந்த 75 ஆயிரம் ரூபாய் பணம் மொத்ததையும் ஆட்டைய போட்டு விட்டு தயார் நிலையில் இருந்த பைக்கில் ஏறி சென்றுள்ளான்.

இந்நிகழ்வுகள் அனைத்தும் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியதை அடுத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement