சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
மகிழ்ச்சியான செய்தி.! விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வர்.!
தமிழ்நாட்டில் நிவர், புரெவி புயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஏற்கெனவே நிவாரணம் அறிவிக்கப்பட்ட நிலையில் ஜனவரி மாதம் பெய்த கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மழையால் பாதிக்கப்பட்ட 6.81 லட்சம் ஹெக்டேர் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட 6.56 லட்சம் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மானாவரி மற்றும் நீர்பாசன வசதி பெற்ற நெற்பயிர்களுக்கான இடு பொருள் நிவாரணம் ரூ.20 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஹெக்டேர்களுக்கு மட்டுமே இடுபொருள் நிவாரணம் எனும் உச்ச வரம்பு தளர்த்தப்பட்டு உச்சவரம்பின்றி நிவாராணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.