யார் கேட்டாலும் கொடுக்கக் கூடாது என சசிகலா வைத்த கோரிக்கை.! ஆனால் சிறை நிர்வாகம் கொடுத்த ஷாக் தகவல்.!

யார் கேட்டாலும் கொடுக்கக் கூடாது என சசிகலா வைத்த கோரிக்கை.! ஆனால் சிறை நிர்வாகம் கொடுத்த ஷாக் தகவல்.!



Rejection of Sasikala Petition

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேரையும் குற்றவாளியாக உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. ஆனால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்த நிலையில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் சசிகலா உள்பட மூன்று பேரின் தண்டனை காலம் முடியும் நிலையில், முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியது. சசிகலா வருகின்ற சட்டசபை தேர்தலுக்கு முன்னர் எப்படியும் வெளியே வந்து விடுவார் என்ற காரணத்தால், அவரது வருகை தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

sasikala

இந்தநிலையில் பெங்களூருவை சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி, பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு கொடுத்த மனுவில், சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார், முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பு உள்ளதா? என்பது உள்பட பல விவரங்கள் கேட்டிருந்தார். அதற்கு சிறை நிர்வாகம் பதிலளித்து வந்தது.

இந்நிலையில் சசிகலா, எனது விடுதலை உள்பட எந்த விவரங்களையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் யார் கேட்டாலும் கொடுக்க கூடாது. இது தனி மனித உரிமை மீறலாக இருக்கும் என்பதால், எனது கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் என்று கடந்த செப்டம்பரில் பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளருக்கு மனு கொடுத்திருந்தார் சசிகலா.

ஆனால் சசிகலாவின் மனுவை ஏற்க கூடாது என்று சமூக ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி சிறை கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் சசிகலா கொடுத்த மனுவை சிறை நிர்வாகம் நிராகரித்துள்ளது.