மாணவர்களே தயாரா?..! தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு உடனடி மறுதேர்வு..! பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு..!re-exam-for-did-not-participate-in-the-10th-exam

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பளிக்க பள்ளிக்கல்வித்துறை முயற்சி எடுத்துள்ளது.

சமீபத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு நடந்து முடிந்த நிலையில், தேர்வில் பல மாணவர்கள் பங்கேற்காமல் இருந்துள்ளனர். இந்த அதிர்ச்சி தகவலால் அடுத்து என்ன செய்யலாம் என பள்ளி கல்வித்துறை ஆலோசனை செய்துவந்தது.

தற்போது தமிழ்நாட்டில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்க மாணவர்களுக்கு மறுவாய்ப்பு அளிப்பதற்காக மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதன்படி பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், மீண்டும் மறுதேர்வு நடத்தப்படும் என்று உறுதியாகியுள்ளது.

இதன் மூலமாக தேர்வு எழுதாத பள்ளி மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதி பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.