தொட்டா அப்டியே ஜிவ்வுனு ஷாக்கடிக்குது.. இரிடிய கும்பல் கரண்டு வைத்து பகல் மோசடி..! 

தொட்டா அப்டியே ஜிவ்வுனு ஷாக்கடிக்குது.. இரிடிய கும்பல் கரண்டு வைத்து பகல் மோசடி..! 


Ranipet Man Cheated By Fake Iridiyam Frauds Police Arrest 3 Person

இரிடியம் விற்பனை செய்வதாக மோசடியில் களமிறங்கிய கும்பல், ஏமாற்று வேலையில் அலுமினிய பொருளின் மீது மின்சாரத்தை பாய்ச்சி சக்தி உணர்வு என பகல் நாடகமாடி சிக்கிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாவில் வசித்து வருபவர் ஜாபிர். இவர் தாம்பரத்தில் வேலைபார்த்து வந்த நேரத்தில், கடலூரை சேர்ந்த உலகநாதன் எனபவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. உலகநாதன் ராஜன் என்பவரிடம் இரிடியம் உள்ளது. இதனை விற்பனை செய்தால் இலட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என்று ஜாபிரிடம் பேசி மூளைச்சலவை செய்துள்ளார். இதில், மதி மயங்கிய ஜாபிரிடம் ரூ. ஒன்றரை இலட்சம் பணமும் பெற்றுக்கொண்ட நிலையில், மீதி ரூ.3 இலட்சம் இரிடியம் வாங்கும் போது தரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக ஜாகிரை நெய்வேலியில் இருக்கும் பாலசுப்பிரமணியன் என்பவரின் வீட்டிற்கு அழைத்து சென்ற உலகநாதன், குறிப்பிட்ட பொருளை காண்பித்து அதுவே இரிடியம் என தெரிவித்துள்ளார். மேலும், பணத்தை கொடுத்து பொருளை எடுத்து செல்லலாம் என கூறப்பட்டுள்ளது. சோதனைக்காக ஜாகிரை இரிடியத்தை தொட்டுப்பார்க்க சொல்ல, அதுவும் ஷாக் அடிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

Ranipet

இதனைத்தொடர்ந்து, கும்பல் பணத்தை கேட்கவே, பணம் தற்போது இல்லை எடுத்து வருகிறேன் என ஜாகிர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் பணம் இல்லாமல் எப்படி அதனை தொடுவாய்? என தாக்குதல் நடத்தியுள்ளது. அங்கிருந்து தப்பி வந்த ஜாகிர் முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தில் உலகநாதன் மற்றும் பாலசுப்பிரமணியம் தொடர்பாக புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், விரைந்து சென்று உலகநாதன் மற்றும் பாலசுப்பிரமணியத்தை கைது செய்தனர். அவர்களிடம் நடந்த விசாரணையில், அலுமினிய பதியத்தின் மேலே அலுமினிய பாயில் பேப்பர் வைத்து மின்சாரம் பாய்ச்சி, அதனை தொட்டால் குறைந்தளவு மின்சாரம் பாயும் அளவில் செட்டப் செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து, உலகநாதன், பாலசுப்பிரமணியம் மற்றும் ராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.