அரசியல் தமிழகம்

போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த அமைப்புகள்.! நன்றி தெரிவித்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.!

Summary:

சென்னையில் இடஒதுக்கீடு கோரி பாமக போராட்டம் அறிவித்த நிலையில் பல அமைப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

இடஒதுக்கீடு என்பது பல்வேறு நிலைகளில் உள்ள பல்வேறு சமூகங்களுக்காக பல்வேறு  பிரிவுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். அது தான் உண்மையான சமூகநீதி ஆகும். ஆந்திரத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு ஏ, பி, சி, டி, இ என 5 பிரிவுகள் மற்றும் இஸ்லாமியர் என 6 தொகுப்புகளாக பிரித்து வழங்கப்படுகிறது. அதே போல் பல  மாநிலங்களில் பல தொகுப்புகளாக பிரித்து வழங்கப்படுகிறது. அதனால் ஒரே நிலையில் உள்ள சமுதாயங்களுக்குள் போட்டி ஏற்படுத்தப்பட்டு, முழுமையாக சமூகநீதி உறுதி செய்யப்படுகிறது.

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் BC இட ஒதுக்கீடு 2 பிரிவுகளாக மட்டும் பிரிக்கப்பட்டுள்ளது. அதுவும் கூட எனது தலைமையில், வன்னியர்சங்கம் தீவிரமாக போராட்டம் நடத்திய பிறகு தான் MBC என்ற இரண் டாவது பிரிவு  ஏற்படுத்தப்பட்டது. இந்தநிலையில், தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதல்கட்டமாக சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன்பு இன்று காலை 11 மணிக்கு போராட்டம் தொடங்கும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார். 

இந்த போராட்டம் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். அதில், சென்னையில் வரும் 4-ம் தேதி வரை நடக்கவுள்ள போராட்டத்தில் லட்சக்கணக்கில் பாட்டாளிகள் பங்கேற்க வேண்டும். நமது உரிமைக்காகவே போராடுகிறோம். எனவே, எதற்காகவும் அஞ்சாமல் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார். 

பமாக அறிவித்த இந்த போராட்டத்திற்கு மருத்துவர் ந.சேதுராமன் தலைமையிலான அகில இந்திய தேவர் பேரவை,  தமிழ்நாடு சூரியகுலம் வண்ணார் சங்கம், அம்பத்தூர் நாடார் கூட்டமைப்பு டிரஸ்ட் ஆகிய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அந்த அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.


Advertisement