தமிழகம் டெக்னாலஜி General

மூலிகை பெட்ரோல் தயாரிப்பு; மீண்டும் கைதாகினர் ராமர் பிள்ளை

Summary:

கடந்த 1996ம் ஆண்டு மூலிகையில் இருந்து பெட்ரோல் தயாரிப்பதாகக் கூறி தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியவர் ராமர் பிள்ளை. 

தொடர்புடைய படம்

பெட்ரோலில் கலப்படம் செய்து தனது கண்டுபிடிப்பை மூலிகை எரிபொருள் என்று பெயர் மாற்றம் செய்து விற்பனை செய்வதாக கூறி ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக கூறி பொதுமக்கள் பலரிடம் ரூ.2.27 கோடி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

தனது கண்டுபிடிப்பை எந்த அதிகாரிகள் முன்னிலையிலும் செய்து காட்டி நிரூபணம் செய்யத் தயார் என்று ராமர் பிள்ளை அறிவித்தார். அதன்படி செய்தும் காட்டினார். ஆனால், அதை விஞ்ஞானிகள் நம்ப மறுத்தனர். 

மூலிகையில் இருந்து பெட்ரோல் தயாரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அறவே இல்லை என்றனர். அதன் பின்னர் ராமர் பிள்ளை தனது கண்டுபிடிப்பை "மூலிகை எரிபொருள்" என்று பெயர் மாற்றி விற்பனையில் இறங்கினார். அதற்காக சென்னையில் 15 விற்பனை நிலையங்களை துவக்கினார். 

முன்பணம் பெற்றுக் கொண்டு விற்பனை ஏஜென்டுகளை நியமித்தார். ஆனால், அவர் விற்பனை செய்த எரிபொருளை பயன்படுத்திய வாகனங்கள் பழுதாகின. இந்த புகாரை அடுத்து சிபிஐ மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் தான் ராமர் பிள்ளை கைது செய்யப்பட்டார்.

ramar pillai க்கான பட முடிவு

இந்த நிலையில், மறுபடியும் மூலிகை பெட்ரோல் தயாரிக்கப்போவதாக அறிவித்த ராமர் பிள்ளை சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சுதந்திர தினத்தன்று அவர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை நொளம்பூரில் ராம்பர் பிள்ளையை போலீசார் கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement