சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
அலட்சியத்தால் நடந்த கோர விபத்து; தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து மோதி 2 பெண்கள் பலி; பயணிகள் 10 பேர் படுகாயம்.!
அதிவேகத்தில் பயணித்து எதிரெதிர் திசையில் நின்று செல்ல வழியின்றி போட்டிபோட்ட ஓட்டுநர்களால் 2 உயிர் பலியான சோகம் கீழக்கரையில் நடந்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில், இன்று தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி பயணம் செய்த தமிழ்நாடு அரசு அதிவிரைவு பேருந்து, இராமேஸ்வரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு மீன் ஏற்றி சென்ற வாகனங்கள் பயணம் செய்துள்ளனர்.
கீழக்கரை தனியார் கல்லூரி பகுதியில் வந்தபோது, அங்கு மேற்கூறிய இரண்டு வாகனங்களும் எதிரெதிர் திசையில் அதிவேகமாக வந்துள்ளன. அங்கு முன்னதாக அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி இறக்க நின்றதாக தெரியவருகிறது.
அரசு விரைவு பேருந்து மற்றும் லாரி அதிவேகத்தில் பயணித்தபோது, பேருந்து லாரியின் மீது மோத இருந்துள்ளது. இதனால் விபத்தை தவிர்க்கும்பொருட்டு அரசு விரைவு பேருந்து ஓட்டுநர், சாலையோரம் வாகனத்தை விரைந்து திருப்பியுள்ளார்.

இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் பேருந்துக்காக காத்திருந்தோரின் மீது மோதி, பள்ளத்தில் பாய்ந்து பனைமரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் சாலையோரம் இருந்த 2 பெண்கள் பரிதாபமாக பலியாகினர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கீழக்கரை காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து பலியானோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பேருந்தில் பயணித்த 10 பயணிகள் காயத்துடன் துடிக்க, அவர்கள் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.