தமிழகம்

நேற்று ஒரே நாளில் ரூ.250 கோடிக்கு மதுவிற்பனை.! வாழ்க குடிமக்கள்! வளர்க தமிழ்நாடு!

Summary:

Ramadoss talk abkut tasmac sale

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது.  இந்தியாவில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், தமிழகம் 2வது இடத்திலும் உள்ளன.  கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த ஜூலை மாதம் 1ந்தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கொண்டுவரப்பட்டது. 

தற்போது வரை தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே ஞாயிற்று கிழமைகளில் மருந்து, பால் கடைகள் மற்றும் மருத்துவமனைகளை தவிர மற்ற நிறுவனங்கள், கடைகள் திறக்க அனுமதியில்லை.  பொதுமக்கள் தங்களது அத்தயாவசிய தேவைக்காக செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


 எனவே தளர்வில்லா ஊரடங்கை முன்னிட்டு மதுக்கடைகளும் மூடப்பட்டு இருக்கும்.  இதனால் தேவையான அளவுக்கு மதுப்பிரியர்கள் நேற்றே மதுபானங்களை வாங்கி சென்றனர்.  நேற்று ஒரேநாளில் ரூ.250 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் ரூ.250 கோடிக்கு மதுவிற்பனை. இன்று முழு ஊரடங்கு என்பதால் குடிமக்கள் நேற்றே போட்டி போட்டு மது வாங்கியதால் விற்பனை அதிகரிப்பாம். வாழ்க குடிமக்கள்! வளர்க தமிழ்நாடு! என பதிவிட்டுள்ளார்.


Advertisement