அரசியல் தமிழகம் இந்தியா

ரஜினி கமல் இருவரும் ஒன்றாக அரசியலில் பயணம்! இருவரின் ஓப்பன் டாக்!

Summary:

rajinikanth and rajini talk about their politics

நடிகர் கமல்ஹாசன் சினிமாதுறைக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவுபெற்றதை கொண்டாடும் விதத்தில்  ‘உங்கள் நான்’ என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இயக்குனர் எஸ்ஏ.சந்திரசேகரன்பேசுகையில், ரஜினியும் கமலும் அரசியலுக்கு வருவது என்பது உறுதி. அதேநேரத்தில் இருவரும் அரசியலில் சாதிப்பதும் உறுதி. ஆனால் அப்படி சாதிப்பது என்றால் இருவரும் தனித்தனியே அரசியலுக்கு வருவதை விட இருவரும் ஒன்றாக சேர்ந்து அரசியல் செய்தால் கண்டிப்பாக தமிழகத்தில் நல்ல ஆட்சியை, அராஜகம் அற்ற ஆட்சியை தருவார்கள் என தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “தமிழக மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம். தமிழக நலனுக்காக சேர்ந்து பயணிக்க வேண்டிய நிலை வந்தால் இணைந்து பயணிப்போம்'' எனக்கூறினார்.

அதேபோல், செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் பேசுகையில், "தமிழ்நாட்டின் நலனுக்காக, மேம்பாட்டிற்காக நானும், ரஜினிகாந்தும் இணைந்து பயணிக்க வேண்டும் என்றால் இணைந்து பயணிப்போம். நாங்கள் இருவரும் இணைவதற்கான அவசியம் ஏற்பட்டால் இணைவோம். ரஜினி சொன்ன அந்த அதிசயம் உண்மைதான் என கூறினார்.


Advertisement