மரியாதைக்குரிய டியர் மோடி ஜி.! நெகிழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடிக்கு கூறிய நன்றி.!

மரியாதைக்குரிய டியர் மோடி ஜி.! நெகிழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடிக்கு கூறிய நன்றி.!


rajini said thanks to modi

தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 71-வது பிறந்தநாளை நேற்று  (12-12-2020) கொண்டாடினார். நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையடுத்து அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று ரஜினிகாந்துக்கு ட்விட்டர் வாயிலாக பாரத பிரதமர் நரேந்திர மோடி, "அன்பான ரஜினிகாந்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆரோக்கியமான வாழ்வை நீங்கள் பெற வேண்டும்”  என பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.3

இந்தநிலையில் மோடியின் வாழ்த்துக்கு நன்றி கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். மோடியின் பிறந்தநாள் வாழ்த்தை மேற்கோள்காட்டி, "மரியாதைக்குரிய அன்பான மோடி ஜி அவர்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி என பதிவிட்டுள்ளார். மேலும், எனது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் உலகெங்கிலும் உள்ள என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்துள்ளார்.