அரசியல் தமிழகம்

ராஜஸ்தான் சமூக நீதித்துறை அமைச்சர் பன்வர் லால் மேக்வால் காலமானார்.!

Summary:

உடல்நல குறைவு  காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தின் சமூக நீதித்துறை அமைச்சர் பன்வர்லால் மெஹ்வால் காலமானார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் சுஜன்கார்க் சுரு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பன்வர்லால் மெஹ்வால் சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தலைவர்களில் இவரும் ஒருவர்.

இவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு குர்கானில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் நேற்று காலமானார். மேக்வாலின் மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேக்வாலின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் கூறுகையில், எங்கள் மூத்த அமைச்சர் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. 1980ஆம் ஆண்டு முதல் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். இந்த மிகக் கடினமான நேரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். அமைச்சர் பன்வர்லால் மறைவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Advertisement