இன்று இந்த மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!
இன்று இந்த மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!
வளிமண்டல சுழற்சியின் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதிக கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 2 ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை முதல் அதிக கனமழை பெய்யலாம். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம். தூத்துக்குடி, மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீன்வர்களுக்கான எச்சரிக்கையாக 2 ஆம் தேதி முதல் 5-ம் தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா, இலட்சத்தீவு, கேரள - கர்நாடக கடலோரப்பகுதி, மாலத்தீவு, தென்மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டியுள்ள மேற்குவங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் வேகம் முதல் 50 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால், இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.