இருக்கு.. இன்னும் மழை இருக்கு.. அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..Rain update for south side districts in Tamil Nadu

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலில், குமரிக்கடல் மற்றும் தென்னிலங்கைப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தென்கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், தெற்கு உள் மாவட்டங்களில் லேசான மழையும் அடுத்த 24 மணிநேரத்தில் பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rain update

அதேபோல் தென்மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.