மறுபடியும் கொட்டி தீர்க்கவிருக்கும் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!.

மறுபடியும் கொட்டி தீர்க்கவிருக்கும் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!.


rain started weather reoprt information


சென்னையில் நேற்று காலை முதல் இரவு வரை பெய்த கனமழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. 

டெல்டா மாவட்டங்களைத் தாக்கிய கஜா புயலைத் தொடர்ந்து, சென்னையிலும் கனமழை பெய்யும் என கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சென்னையில் அவ்வப்போது விட்டு விட்டு கனமழையும் மிதமான மழையும் பெய்து வருகிறது.  

நேற்று முன்தினம் மாலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. அதைத் தொடர்ந்து நேற்று இரவு வரை மழை விடாமல் பெய்தது. 

இந்த நிலையில், மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருவதால், தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழையும்  சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்தநிலையில் வரும் 24 மணிநேரத்தில் வடதமிழக்தில் பரவலான மழையும்., தென்தமிழகத்தில் மிதமான மழையும் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.