தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! எந்த எந்த மாவட்டங்களுக்கு.?



rain-in-tamilnadu-WZQ2R3

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு, இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் மே 4ஆம் தேதி தொடங்கிய கத்திரி வெயிலால் கடந்த சில நாட்களாக புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, கடலூர், நாகை, சேலம், உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்தது. ஒருபுறம் கொரோனாவும், மறுபுறம் கத்திரி வெயிலும் தமிழக மக்களை வாட்டி வதைத்தது. சென்னியிலும் கடந்த சில நாட்களாக வெப்பநிலை 100ஐ கடந்து பதிவானது.

rain

இந்தநிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு, இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, தென்காசி, நீலகிரி, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் வெயில் மேலும் அதிகரிக்கும் எனவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.