
rain in tamilnadu
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணிநேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், நெல்லை, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 12 சென்டி மீட்டர் மழை அளவும், காரைக்குடியில் 11 சென்டிமீட்டர் மழை அளவும் பதிவாகியுள்ளது.
கேரளா மற்றும் கர்நாடக கடற்கரை பகுதியிலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement