அடுத்த 3 நாட்களுக்கு கொட்டி தீர்க்கவிருக்கும் கனமழை.! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்.!

அடுத்த 3 நாட்களுக்கு கொட்டி தீர்க்கவிருக்கும் கனமழை.! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்.!rain-in-tamilnadu-AB8SW9

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் சமீபத்தில் நல்ல மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பியுள்ளது. 

இந்தநிலையில், தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, வடக்கு மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும், நீலகிரி, கோவை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில், வரும், 11ம் தேதி கன மழை பெய்யும் எனவும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில், 12ம் தேதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.