தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை.! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா.?

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை.! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா.?



rain in tamilnadu

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் குறிப்பாக திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் நல்ல மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பியுள்ளது. 

இந்தநிலையில், வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நீடிப்பதால் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் இன்று மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடற்பகுதியில் உருவானா வளிமண்டல மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோவை, நீலகிரி, ஈரோடு, மதுரை, விருதுநகர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் இன்று பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.